பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு,
வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில்,
போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், நேற்று முன்தினம் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.
இதில், 'பி' பிரிவில், மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள், மாணவர்களிடம்
குழப்பத்தை ஏற்படுத்தின. அதாவது, 61 முதல், 63 வரை, ஒரு மதிப்பெண்
வினாக்கள் இருந்தன. ஒரு மூல வரியை கொடுத்து, அதன் உவமை மற்றும் உருவக
வார்த்தையை சுட்டிக் காட்டும்படி கேட்கப்பட்டிருந்தது. இதில், 61 மற்றும்,
62 ஆகிய இரு வினாக்களுக்கு இடையே, பெரிய இடைவெளி இருந்தது. மேலும், 62வது
வினாவை ஒட்டி, 63வது வினாவுக்கான மூல வரி இடம்பெற்றது.
அதனால், எந்த மூல வரிகளுக்கு, எந்த பதில் எழுத வேண்டும் என, மாணவர்கள் குழப்பம் அடைந்து, விடைகளை மாற்றி எழுதி விட்டனர்.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: வினாத்தாளில், இரண்டு வினாக்களுக்கு இடையில், தேவையற்ற இடைவெளி இருந்தது. அதனால், பல மாணவர்கள் குழம்பியதால், சரியான பதிலை எழுத முடியவில்லை. சிலர், 62வது வினாவுக்கு, 63வது வினாவுக்கான மூல வரியை பயன்படுத்தி, பதில் எழுதியுள்ளனர். இதுகுறித்து, ஆங்கில ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், 61வது கேள்வியில், உருவகம் என்பதற்கான, 'மெட்டபோர், பெர்சானிபிகேஷன்' ஆகிய இரண்டு பதிலும் வர வாய்ப்புள்ளது. இதில், மாணவர்கள் எதை எழுதியிருந்தாலும், பதில் அளிக்கலாம் என, ஆங்கில ஆசிரியர்கள் தெரிவித்தனர்.ஆங்கிலம் இரண்டாம் தாளில், 'சி' பிரிவில், ஐந்து மதிப்பெண்களுக்கு, 100 வார்த்தைகளில் சுருக்கி, ஒரு கட்டுரை எழுதும் கேள்வி இடம் பெற்றுள்ளது. அது, முந்தைய தேர்வுகளில், 'மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுது' என, கேட்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் பலர், வினாத்தாளில் இருந்த கட்டுரையை, மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதியுள்ளனர். அவர்களுக்கும் முழுமையான மதிப்பெண் வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...