சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட 17 லட்சம்
குழந்தைகள் பலியாகி வருவதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்கொல்லும் மாசுபாடு :
பாதுகாப்பாற்ற குடிநீர், சுகாதாரமின்மை, சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள், வீடு மற்றும் சுற்றுப்புற மாசுபாடுகள் ஆகியவை இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஒரு மாதத்திற்கு 4 குழந்தைகள் என்ற வீதத்தில் இந்த இறப்பு நிகழ்ந்து வருவதாக உலக சுகாதார மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காற்று மாசுபாடு காரணமாக நிமோனியா, சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள், வாதம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாசுபாட்டால் பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்கு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்கள் வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...