Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 1362 ஆக உயர்வு: நிதியமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-2018 ஆம் ஆண்டில் 1362 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று 2017-2018 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மருத்துவக்கல்லூரிகளில் 2011 ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 2016-2017 ஆம் ஆண்டில் 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு எடுத்த முயற்சியின் விளைவாக, 2016-2017 ஆம் ஆண்டில் 1,188 ஆக இருந்த மருத்துவக் கல்விக்கான பட்ட மேற்படிப்பு இடங்களின் கணினிக்கல்வி எண்ணிக்கை 2017-2018 ஆம் ஆண்டில் 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.466 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 கோடி செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை, சிவகங்கையில் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.
சமூக பொருளாதார திட்டங்களை அரசு நிறைவேற்றும். ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தும் போது தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும். ஜி.எஸ்.டி. முறை அமலுக்கு வர உள்ளதால் வரிச்சலுகைகள்   எதுவும் கணினிக்கல்வி பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகளை கட்டித்தர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive