Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.130 கட்டணத்தில் 100 சேனல்கள் கேபிள் 'டிவி'யில் இனி பார்க்கலாம்

'மாதம், 130 ரூபாய் கட்டணத்தில், 100 கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் கேபிள் ஒளிபரப்பை, 'செட் - டாப் பாக்ஸ்' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும் என, 2011ல் டிராய் உத்தரவிட்டது. பின், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அமல்படுத்த உத்தரவிட்டது.
இறுதியாக, அனைத்து கிராமப் பகுதிகளிலும், 2017 மார்ச்சுக்குள், டிஜிட்டல் சேவை கட்டாயமாக்கப்பட வேண்டும் என, கெடு விதித்தது. இது, ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், கேபிள் கட்டணம் தொடர்பான புதிய அறிவிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, கேபிள் ஆபரேட்டர்கள், குறைந்தபட்சம், 130 ரூபாய் மாத கட்டணத்தில், 100 சேனல்களை, வாடிக்கையாளர்களுக்கு தருவது
கட்டாயமாகி உள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்ததை தொடர்ந்து, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு கடிவாளம் போடுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 100 சாதாரண சேனல்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. அவற்றை, கேபிள் ஆபரேட்டர்கள், 130 ரூபாய்க்கு தர வேண்டும்.
மேலும் கட்டண சேனல்களை பொறுத்தவரை, 25 சேனல்கள் உடைய தொகுப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சென்னையில் தற்போது குறைந்தபட்சம், 180 ரூபாய் இல்லாமல், கேபிள் இணைப்பு பெற முடியாத நிலை உள்ளது. இந்த புதிய உத்தரவு மூலம், 130 ரூபாய்க்கு, 100 சேனல்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நிலவும் குழப்பங்கள்!

சென்னை மற்றும் சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில், 'செட் - டாப் பாக்ஸ்' வினியோகிக்கப்படவில்லை. சென்னையிலேயே டிஜிட்டல் சேவை முழுமையாக வழங்கப்படவில்லை. பல இடங்களில் சாதாரண ஒளிபரப்பு தொடர்கிறது.
பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை உடைய அரசு கேபிள் நிறுவனத்திற்கு, டிஜிட்டல் சேவைக்கான உரிமம் மறுக்கப்படுகிறது. அதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்' தர முடியாத நிலை உள்ளது.
அங்கெல்லாம், சாதாரண தரத்திலான சேனல்களை மட்டுமே மக்கள் பார்த்து வருகின்றனர்.

என்ன பயன்?
இதுநாள் வரை, எம்.எஸ்.ஓ., எனப்படும், கேபிள் ஒளிபரப்பு சேவைக்கான உரிமம் பெற்ற பெரு நிறுவனங்களும், கேபிள் ஆபரேட்டர்களும் நிர்ணயித்ததே விலையாக இருந்தது.
இனி, அந்த பிரச்னை இல்லை. எல்லாமே வெளிப்படையாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் அறியும் வகையில், கட்டண சேனல்களின் விலை விபரத்தை, எம்.எஸ்.ஓ.,க்கள் தெரிவிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive