Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணப்புழக்கம் ரூ. 11.73 லட்சம் கோடியாக குறைவு!

இந்தியாவில் பணப்புழக்கம் ரூ.11.73 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தெரிவித்துள்ளார். 
 
        கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் நாட்டில் ரூ.16.41 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ்  நடவடிக்கையால், பணப்புழக்கம் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் நாட்டில் ரூ12.82 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் பணப்புழக்கம் ரூ.14.28 லட்சம் கோடியாக இருந்தது.

முக்கியமாக, 'தற்போது 1.9 பில்லியன் மதிப்பில் 5 ரூபாய் நாணயங்களும், 1.3 பில்லியன் மதிப்பில் 10 ரூபாய் நாணயங்களும், 2.6 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளும், 3.6 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளது' என அர்ஜுன் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive