சியரா லியோன் நாட்டின் கிழக்கு பகுதியில் 706 காரட் வைரம்
தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள பெரிய வைரங்களில் 10வது பெரிய
வைரம் இது.
சியரா லியோனில், வைரம் மிகுந்த கோனா பகுதியில், இந்த வைரத்தை இமானுவேல் மோமோக் என்பவர் தோண்டியெடுத்தார். அரசு
அனுமதியுடன் தானாகவே வைரத்தை தோண்டியெடுத்துள்ளார். இந்த வைரம் மூலம் அரசுக்கு கிடைக்கும் பணம் நாடு முழுவதும் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என சுரங்கத்துறை அமைச்சர் மின்கைலு மன்சராய் தெரிவித்துள்ளார். அதிபர் எர்னஸ்ட் பய் கொரோமோ பார்வையிட்ட பின் வைரம் மத்திய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்திற்கு இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...