பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம்
பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என,
கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித தேர்வு
நடந்தது. பொதுவாக கணித தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும்
என, மாணவர்கள் விரும்புவர். ஆனால், நேற்றைய வினாத்தாள் கடினமாக
இருந்ததால், மாணவர்களின் சென்டம் லட்சியம் நிறைவேறுமா என, சந்தேகம்
எழுந்துள்ளது.● இரு மதிப்பெண்ணுக்கான, 36வது கட்டாய வினாவில், இடம்பெற்ற
கிரியேட்டிவ் வகை வினா கடுமையாக குழப்பியது. இந்த வினாவை, புத்தகத்தில்
பார்த்ததே இல்லை என, மாணவர்கள் கூறினர்● ஐந்து மதிப்பெண்ணுக்கான, 45வது
வினாவில், ‘பி’ பிரிவு வினா கடினமாக இருந்தது. ஆனாலும், சாய்ஸ் என்ற
விருப்ப வினாவில், கடின வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காமல் விட்டு
விட்டனர்.
இதனால், சென்டம் குறையலாம் என, ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இதனால், சென்டம் குறையலாம் என, ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...