சோனி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ
ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகம்
செய்யும் போது ரூ.51,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்சமயம்
இந்த ஸ்மார்டபோன் ரூ.41,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைப்பு குறித்து சோனி சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும்
வெளியிடப்படவில்லை என்றாலும் ரூ.10,000 குறைக்கப்பட்ட விலையில்
ஸ்மார்ட்போன்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. பிளிப்கார்ட், அமேசான்
உள்ளிட்ட தளங்களில் சோனி எக்ஸ்பீரியா XZ ரூ.39,990 என்ற விலைக்கு விற்பனை
செய்யப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை எக்ஸ்பீரியா XZ
ஸ்மார்ட்போனில் 23 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா
வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான புகைப்படங்களை வழங்க ஏதுவாக நிறைய
சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 5.2 இன்ச் ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் IP 65/68 ரேட்டிங் கொண்டிருப்பதால் வாட்டர் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள சோனி எக்ஸ்பீரியா XZ 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒற்றை சிம் கொண்ட மாடலும் வெளியிடப்பட்டுள்ளது, இதில் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எக்ஸ்பீரியா ஃபிளாக்ஷிப் போன்களை போன்றே XZ ஸ்மார்ட்போனிலும் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...