புதுடெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு
மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் 6 பாடங்களில் எழுத வேண்டும்.
தொழிற்கல்வி
பாடம் கட்டாயமாகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும்
மாணவர்கள் தற்போது 2 மொழிப்பாடங்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என 5
பாடங்களை படித்து வருகின்றனர்.
இது தவிர மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தையும் கூடுதலாக
விருப்ப பாடமாக கற்று வருகின்றனர். இந்த நிலையில் வரும் 2018ம் ஆண்டு முதல்
10ம் வகுப்பில் கூடுதலாக தொழிற்கல்வி பாடமும் கட்டாயபாடமாக இடம்
பெறுகிறது. இதனால் மாணவர்கள் மொத்தம் 6 பாடங்களில் தேர்வு எழுத வேண்டும்
என சிபிஎஸ்இ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தொடர்பான அந்த சுற்றறிக்கையில் `10ம் வகுப்பில் அறிவியல், கணிதம்,
சமூகஅறிவியல் ஆகிய முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் தோல்வி அடையும்
மாணவர்கள் தொழிற்கல்வியை கூடுதல் பாடமாக தேர்வு செய்து கொள்ளலாம்’ என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் 13 பாடங்களில்
ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 50 மதிப்பெண்கள் செய்முறை ேதர்வு
மீதமுள்ள 50 மதிப்பெண்கள் எழுத்து தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. செய்முறை
மற்றும் எழுத்து தேர்வு என இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 33 சதவீத
மதிப்பெண்கள் பெற்றால் தான் அவர் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...