'ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை, ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்., 29, 30ல் நடைபெறும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அட்டவணை வெளியிட்டுள்ளது. வழக்கமாக, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும். இந்த கல்வியாண்டின் இறுதி நாளான, ஏப்., 29ல், தேர்வு எழுத வேண்டும் என்பது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும். இறுதி வேலை நாளுக்குப் பின், தேர்வுத்தாள் திருத்தும் பணியை செய்வதா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, அவர்களால் உரிய முறையில் தயாராக முடியாது. மூன்று ஆண்டுகளை கடத்திய, அ.தி.மு.க., அரசு, பள்ளிக்கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன், அவசர அவசரமாக தேர்வை நடத்துவதில், பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை, ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு, தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

It's correct..pls postpone
ReplyDelete