மேஷம்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து
செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில்
கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய
அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ரிஷபம்
காலை
11.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும்.
பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
மிதுனம்
காலை
11.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு
ஆட்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள
வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில்
இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது
அலட்சியம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
கடகம்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை
உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை
ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
சிம்மம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு
லாபம் உண்டு. உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கன்னி
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து
யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
துலாம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாயாரின்
உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் அமைதி
நிலவும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
விருச்சிகம்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
தனுசு
காலை
11.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரபட வேண்டாம்.
பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கேட்ட
இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வாகனப் பழுதை சரி
செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை
விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மகரம்
காலை
11.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க
முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும்.
நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில்
வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கும்பம்
ஒரு
விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை
புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க
வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். உத்யோகத்தில் சக
ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
மீனம்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...