Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 21.2.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மிதுனம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
சிம்மம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கன்னி
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மகரம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கும்பம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மீனம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive