குரூப்
- 4 தேர்வு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 4ல் அடங்கிய, இளநிலை
உதவியாளர். தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ.,
6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. மொத்தம், 12.51 லட்சம் பேர் பங்கேற்றதில்,
11.50 லட்சம் பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவை, தேர்வாணையத்தின்,
www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண் அடிப்படையில், பொது தரவரிசை, வகுப்பு வாரியான தரவரிசை, சிறப்புப் பிரிவு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றில், தகவல் தவறாக இருந்தால், அவர்கள் கவுன்சிலிங் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மார்ச், 20ல் துவங்கும். அதற்கான பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...