Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:குரூப்-1 முதல் நிலை தேர்வில் மாணவர்களின் அறிவாற்றலை ஆராயும் வகையில் வினாக்கள் இல்லை: தேர்வர்கள், பயிற்சியாளர்கள் கருத்து.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வில், மாணவர்களின் அறிவாற்றலை ஆராயும் வகை யிலான கேள்விகள் கேட்கப்பட வில்லை என்று தேர்வெழுதிய மாணவர்களும், போட்டித்தேர்வுக் குப் பயிற்சி அளிப்பவர்களும் தெரிவித்தனர்.
 
          துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலி யிடங்களை நிரப்புவதற்கான குருப்-1 முதல்நிலைத்தேர்வு நேற்று நடந்தது. இதில், பொது அறிவு பகுதியில் இருந்து 150 வினாக்கள், அறிவுக்கூர்மை பகுதியில் இருந்து 50 கேள்விகள் என மொத்தம் 200 வினாக்கள் இடம்பெற்றிருந்தன.தேர்வில் அறிவாற்றலை ஆராயும் வகையிலான கேள்விகள் இடம் பெறவில்லை. விநாடி-வினா போல் கேள்விகள் கேட்கப்பட்டிருந் தன என்று தேர்வர்களும், பயிற்சியாளர்களும் தெரிவித்தனர்.
முதல்நிலைத்தேர்வை எழுதிய சங்கரன்கோவிலைச் சேர்ந்த இளைஞர் மு.அய்யாசாமி கூறும் போது, “வினாத்தாளை மேலோட்ட மாக பார்த்தால் கேள்விகள் எளிதாக தோன்றும். ஆனால், ஒவ்வொன்றாக படித்தால் வேறு மாதிரியாக இருக்கும். கடினம்என்றோ எளி தானது என்றோ சொல்லிவிட முடியாது. இரண்டுக்கும் இடைப் பட்ட நிலையில் சுமாராக இருந்தது. அண்மைக்கால நிகழ்வுகளில் இருந்து 37 வினாக்களைக் கேட்டிருந்தார்கள். பொதுவாக, குரூப்-1 தேர்வுக் கென்று ஒரு தரம் இருக்கிறது. எப்படி அகில இந்திய அளவில் ஐஏஎஸ் தேர்வு மிகப்பெரிய தேர்வோ, அதேபோன்று தமிழகத் தில் குருப்-1 தேர்வு மிகப்பெரிய தேர்வாகும். ஆனால், அதற்கு உண்டான தரத்தில் கேள்விகள் கேட்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ விநாடி-வினா நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்வி போன்று நேரடி கேள்விகளாக கேட்டிருக்கிறார்கள். ஆராய்ந்தறிந்து விடையளிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெறவில்லை” என்றார்.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி எஸ்.சவுமியா கூறும்போது, “வினாக் கள் கடினமாகவும் இல்லை.எளிதாகவும் இல்லை.

இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தன. சுயமாக படிப்பதைக் காட்டிலும் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தால் நன்கு விடையளிக்கும் வகையில்தான் பெரும்பாலான வினாக்கள் அமைந்திருந்தன” என்றார்.சென்னை வருமானவரி அதிகாரி யும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்து வருபவருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இந்திய வரலாறு, அரசியல் சாசனம் பகுதிகளில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளே இடம்பெற்றிருந்தன.அறிவியல் பகுதியில் பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களை அப்படியே கேட்டிருக்கிறார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தெந்த மாதிரியான கேள்வி கள் கேட்கப்படுகிறதோ அதே முறையிலான கேள்விகள் திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.

தற்போது மிக முக்கிய விஷயங் களாக விவசாயிகள், மீனவர்கள்,நெசவாளர்கள் பிரச்சினைகள், கல்வி, வேலைவாய்ப்பு, சர்வ தேச பொருளாதாரம், சமூக, பொரு ளாதார பிரச்சினைகள், அறநெறி கள், மதிப்பீடு என எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இவை குறித்து இளைஞர்கள் சிந்திக்கும் வகையில் கேள்விகளை கேட்கலாமே, எதற்காக ஒரே மாதிரியான கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.பாமினி பேரரசின் ஆட்சி யாளர்களை காலவரிசைப்படுத்தி யும், உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தும் வகையிலும் கேள்விகள் கேட்டிருக் கிறார்கள்.

இதுபோன்ற வினாக்கள் மூலம் தேர்வர்களின் அறிவாற்றலை எப்படி சோதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சாதிக் கூறும்போது, “அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐஏஎஸ் தேர்வுக்கு நிகரானது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு. காரணம், குரூப்-1 அதிகாரிகள் பின்னாளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவார்கள்.எனவே, பெரிய பொறுப்புக்கு வரக்கூடிய இந்த அதிகாரிகளைத் தேர்வுசெய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண் டியது அவசியம்.

தேர்வர்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்களா? தர்க்க ரீதியாக சிந்திக்கிறார்களா? என்பதை எல்லாம் ஆய்வுசெய்யும் வகையில் கேள்விகள் அமைந் திருக்க வேண்டும்.ஒருசில வினாக்கள் வேண்டு மானால் நேரடி வினாக்களாக கேட்கப்படலாம். ஆனால், பெரும் பாலான கேள்விகள் ஆராய்ந்து பதிலளிக்கும் வகையில் தான் கேட்கப்பட வேண்டும். அதற்கேற்ப வினாத்தாள் தயாரிப்பு முறையிலும், அந்தப் பணியில் ஈடுபடுவோரைத் தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive