இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை எதிர்கொள்ள தயாராகும் பணியில் பட்டதாரி
மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டும். எனவே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.கடந்த, 2012 ல் முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்த நிலையில், கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக, மூன்று ஆண்டுகளாக தேர்வு நடக்கவில்லை.
இந்நிலையில், வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டு, ஏப்ரல், 29 ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கும், மறுநாள் (30ம் தேதி) பட்டத்தாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு நடக்கிறது.தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வை எதிர்கொள்பவர்களுக்கான விண்ணப்பங்கள், "இம்மாதம், 15 முதல், மார்ச், 8ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப் படும்; எந்த மையத்தில் விற்பனை குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்,' என உயரதிகாரிகள் பதிலளிக்கின்றனர்.முதல் முறையாக, 2012ல் தேர்வு நடந்த போது, தேர்ச்சி சதவீதம் எதிர்பாராத வகையில் சரித்தது. மூன்றில் ஒரு சதவீதம் கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்வு எழுத வழங்கப்பட்ட நேரம் போதியதாக இல்லை என ஆசிரியர்கள் குமுறினர்.
இந்நிலையில், தேர்வுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி கிடைப்பதால், தேர்வு எதிர்கொள்ள இப்போதிருந்தே பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மும்முரமாக தங்களுக்குள் ஆலோசித்து தயாராகி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...