திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற
வேண்டும்.
அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை, தேர்வு வாரியம் ஒவ்வொரு
ஆண்டும் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு,
ஏப்., 29ம் தேதியும்; பட்டத்தாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, 30ம்
தேதியும் நடக்கிறது. இத்தேர்வு எழுதுவோருக்கான விண்ப்ப வினியோகம், நாளை
துவங்குகிறது.விண்ப்பங்கள் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி,
குமார் நகர் மாநகராட்சி பள்ளி, அனுப்பர்பாளையம், அவிநாசி, பல்லடம்,
கொடுவாய், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், வெள்ளக்கோவில்
ஊத்துக்குளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ப்பம் வழங்கப்பட
உள்ளது.விண்ப்பங்கள், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ப்பங்கள், 28ம் தேதி மாலை, 5:00
மணிக்குள், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...