ஜியோ
ஜியோவின் எண்ணிலடங்கா ப்ரீ கால்ஸ்
மற்றும் டேட்டா சலுகையால், ஒட்டு மொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் தற்போது தன் வசம் உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள,
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஜியோ.
யூபர்
யூபர் ஆப் பயன்படுத்தாதவர்கள் யாரும்
இல்லை என்ற அளவுக்கு, பெரும்பாலோனோர் யூபர் ஆப்பை பயன்படுத்தி, கால்
டேக்ஸி புக் செய்கின்றனர். யூபர் கார் சர்வீசஸ் குறைந்த கட்டணத்தில் சேவை
வழங்குவதால், பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.
கைக்கோர்த்தது
ஜியோ பல ஆப்ஸ் கொண்டுள்ளது. ஜியோ
சினிமா, ஜியோ மணி உள்ளிட்ட பல ஆப்ஸ் உள்ளது. இந்நிலையில், ஜியோ உபெர் உடன்
இணைந்து , இன்று முதல் மிக சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க
உள்ளது.
ஜியோ மணி :
உபெர் கால் டேக்ஸி பயன்படுத்தும்
போது, ஜியோ மணி மூலமாக , கட்டணத்தை செலுத்த முடியும் . மேலும் ஜியோ மணி ஆப்
பயன்படுத்தினால், நிறைய கூபன்ஸ் வழங்குகிறது.
டிஜிட்டல் இந்தியா :
ஜியோ ப்ரீ டேட்டா வழங்க
தொடங்கியதிலிருந்து, டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது
என்றே கூறலாம் . மேலும் ஜியோ, டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு அனைத்து மக்களின்
ஒத்துழைப்பு கிடைக்க ஜியோ பெரிதும் உதவுகிறது. ஜியோவும் டிஜிட்டல் இந்தியா
திட்டத்திற்கு பெரிதும் ஆதரவு தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...