Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கமல்ஹாசனை கைது செய்: தொடரும் வழக்குகள்!

       கமல்ஹாசன் ட்விட்டரில் தொடர்ந்து அரசியல்வாதிகளை கேள்விகேட்கத் தொடங்கியதிலிருந்தே இந்த சம்பவம் எதிர்பார்த்திருந்தது தான்.
 
           கமல்ஹாசனின் நற்பணி மன்ற இயக்கத்தினைச் சேர்ந்த சுதாகர் உட்பட சிலரை காவல்துறை கைது செய்திருக்கிறது. கடந்த மாதம் மத்திய, மாநில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில்

பங்கெடுத்து கலவரம் செய்ததாக இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் இச்செயலை கண்டித்து கமல் சில தொடர் ட்வீட்டுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது. நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு

தனது நற்பணி இயக்கத்தினரின் கைதைக் கண்டித்த அதேசமயம், மற்றவர்களையும் அமைதிகாக்கச் சொல்லியிருக்கும் கமல்ஹாசனை இந்தப் பிரச்னை அதோடு விடுவதாக இல்லை. சமீபத்தில், மக்கள் விருப்பத்தை ஏற்காமல் ஏதேச்சையாக செயல்படும் எம்.எல்.ஏ-க்களுக்கு மக்கள் தகுந்த வரவேற்பினை அளிப்பார்கள் என்றும், கவர்னருக்கு தங்களது எதிர்ப்பை மக்கள் மின்னஞ்சலில் அனுப்பவேண்டுமென்றும் அவர் பதிவு செய்திருந்த ட்வீட்டுகளை அடிப்படையாக வைத்து இந்திய தேசிய லீக் கட்சியின்

மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹிம் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கினைப் பற்றி அப்துல் ரஹிம் கொடுத்திருக்கும் விளக்கக்கடிதம்.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மீது இந்திய தேசிய லீக் கட்சி ஏன் புகார் கொடுத்தது.

அரசின் தவறுகளை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை இவரை முதல்வராக தேர்ந்தெடுங்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுங்கள் என சொல்வது கூட பெரிய தவறு இல்லை. அதே நேரத்தில் தான் சொன்னவர்களை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை என்பதிற்காக சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டுவது சட்டத்திற்கு எதிரானது. நடிகர் கமல்ஹாசன் ஓபிஎஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் சமூக வளைய தளம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்தார்

என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததினால் ஆத்திரமடைந்த நடிகர் கமல்ஹாசன் தனது டூவீட்டர் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிக்கு வரும் போது மக்கள் சரியாக கவனிப்பார்கள் எனவும் ஆளுநர் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எனவும் ஒருவித மிரட்டலோடு சமூக வளைய தளத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களை வன்முறை தூண்டும் விதமாக இந்த கருத்து உள்ளது. தமிழ் நாட்டில் பெரிய நடிகர் கமல்ஹாசன் என்பதினால் மக்கள் இவரின் கருத்தை தவறான முறையில் விளங்கி வன்முறைக்கு அழைத்து செல்லும். ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தான் விரும்பிய அரசு அமையவில்லை என்பதினால் வன்முறைக்கு மக்களை தூண்டுவது சட்டப்படி குற்றம். நடிகர் கமல்ஹாசன் அவர்களின் டூவிட்டர் சமூக வளையதள பதிவை இளைஞர்கள் முதல் ஊடகங்கள் வரை பெரும் அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையை பயன்படுத்தி தொகுதி மக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் சட்டமன்ற உறுப்பினர்களை தாக்குதல் நடத்தினால் நடிகர் கமல்ஹாசன் தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும். வன்முறை தூண்டும் வகையில் சமூக வளைய தளத்தில் பதிவு செய்த கமல்ஹாசன் அவர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வட சென்னை மாவட்டம் சார்பாக புகார் கொடுதுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது .




3 Comments:

  1. உள்ளூர் பன்றிகள் ஒரு உலக சிங்கத்திற்கு ஈடாகாது

    ReplyDelete
  2. இதை எதிர்த்தால் மத சாயம் பூசி திசை திருப்புவார்கள்.. தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகளின் அடக்குமுறை என ஆர்பரிப்பார்கள்.. நல்லதை கூறிய நம்மவரை வாழ்த்திவிட்டால் மற்றவர் அணிந்த முகமூடி கழனறு உண்மை முகம் ஊருக்கு தெரிந்துவிடும் எனவே நல்லவரை மிரட்டுகிறார்கள்.

    ReplyDelete
  3. இந்த சூழலிலாவது துணிந்து நியாயத்தின் பக்கம் நிற்போம். செய் வதை திருந்தச் செய்வோம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive