உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் இன்று திடீரென ஹேக்கர்களால்
முடக்கப்பட்டதாகவும் உடனடியாக தேசிய தகவல் மையம் மூலம் இணையதளம்
சரிசெய்யபட்டதாகவும் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரப் பூர்வ இணையதளத்தை. ‘அலோண் இன்ஜெக்டர்’ என தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்ட கும்பல் முடக்க முயற்சி செய்தது, இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வாக்கியங்களையும் பதிவிட்டு இருந்தது.இதனையறிந்த தேசியக் பாதுகாப்பு படை அதிகாரிகள் முடக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதே போல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்கா நாடுகளின் இந்திய தூதரக இனையதளம் முடக்கப்பட்டு புள்ளிவிவரங்கள் திருடப்பட்டன. மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் வெளியில் கசிந்தது.
SQL மென்பொருளை இணையதளங்களில் பயன்படுத்துவதால் சிறுவயது குழந்தை கூட இணையதளங்களில் உடுருவி ஹேக் செய்ய முடியும்.இதனால் அரசு துறைகளின் 700 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.தற்போது எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்ன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 8348 நபர்கள் இணையக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...