சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு
சங்கம் சார்பில் குருதிக் கொடையாளர்களின் விவரங்களை அரசு இணையத்தில்
பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றது .
முகாமில்,
பல்கலைக்கழக வேளாண்மைப் புலத்தில் பயிலும் 2,500 மாணவ-மாணவிகள்
பங்கேற்றனர். இவர்களின் ரத்த வகைகள் கண்டறியப்பட்டு, சுய விவரங்கள்
பெறப்பட்டு தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
வேளாண்மை
புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்
பி.சவுந்தரபண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் செஞ்சுருள் சங்க
திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ், கடலூர் மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் முகமது
பரூக், மேற்பார்வையாளர் தங்கமணி, மகப்பேறு மருத்துவர் லதா, ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆலோசகர் விஜயலக்ஷ்மி உள்ளிட்டவர்கள்
கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...