கடலில் கலந்த கச்சா எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள
தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்க, 6 மருத்துவக் குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெயை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் இருந்தால் மட்டுமே சுத்தம் செய்ய இறங்க வேண்டும். தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று, இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் அகற்றுபவர்களுக்கு தோல் அரிப்பு எரிச்சல், தலைவலி, மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொது சுகாதாரத் துறை சார்பில் 4 நடமாடும் மருத்துவக் குழுக்களும், துறைமுகப் பகுதியில் 2 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், துறைமுகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிய, 60 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகள் துறை இணைந்து மருத்துவ முகாம்களை அமைத்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...