உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதி
நியமனங்களுக்கு ஒன்பது நீதிபதி பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்துள்ளது.
அதன்படி, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஹேமந்த் குப்தா, திரிபுரா உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி அபிலாஷா குமாரி, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி அகமது, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி பிரதீப் நந்தாராஜொக், பாட்னா உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி
ராஜேந்திர மேனன், ஹைதராபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி டி.வைபே, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ஹெச்.ஜி.ரமேஷ், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி பி.கே.மொகந்தி ஆகிய பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஒன்பதுபேரில் நான்குபேரின் பெயர்களை, சமீபத்தில் பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்றம் செல்லும் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்களால் ஏற்படவுள்ள காலியிடங்களுக்கு, நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரின் தலைமையில் செயல்பட்டுவரும் கொலீஜியம் மத்திய அரசுக்கு தனியாக பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்கு ‘கொலீஜியம்' என்ற அமைப்பு நடைமுறையில் இருந்தது. இதற்கு மாற்றாக, நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. மேலும் கொலீஜியம் நடைமுறையே தொடரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் கொலீஜியம் பரிந்துரைசெய்யும் ஒவ்வொரு விவகாரமும் ஏதோ ஒரு காரணத்தால் மத்திய அரசால் மறுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள் பற்றாக்குறையாக இருக்கிறது. இது அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களாகும். மேலும் 60,000 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால் உயர்நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகளை நியமிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.
இந்த பரிந்துரையை மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டால், எப்போதும் இல்லாதளவுக்கு அதிகளவிலான நீதிபதி நியமன எண்ணிக்கையாக இது இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...