'யூ டியூபில்' புது புது வீடியோக்களை, 'அப்லோடு' செய்து அசத்தி
வருபவர்களின் வசதிக்காக, நேரலை வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஒன்றான, யூ டியூப், வீடியோ சேவையை வழங்கி வருகிறது.
இதில் உள்ள வீடியோக்களை பார்த்து ரசிப்பதுடன், அதை, மற்றவர்களுக்கு
அனுப்பும் வசதியும் உள்ளது.
தாங்கள் விரும்பும் வீடியோக்களை, தனிநபர்கள்,
'அப்லோடு' செய்யும் வசதி உடைய யூ டியூபில், புதிய வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுத்த வீடியோ காட்சிகளை மட்டுமே,
'அப்லோடு' செய்யும் வசதி இருந்து வந்தது. தற்போது புதிய வசதியாக, வீடியோ
எடுக்கும்போதே, நேரலையாக அதை ஒளிபரப்பும் வசதியை, யூ டியூப் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, யூ டியூப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மொபைல் போன்
மூலம், எங்கிருந்தபடியும் பார்க்க வசதியாக, இதற்காக, 'மொபைல் ஆப்' ஒன்றும்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 'யூ டியூப் ஆப்' வழியாக, நேரடி வீடியோ
காட்சிகளை, எங்கிருந்தபடியும், 'அப்லோடு' செய்ய முடியும். முதல்கட்டமாக, 10
ஆயிரம் பேர், நேரலையாக, வீடியோவை ஒளிபரப்ப வசதி அளிக்கப்பட்டது. இந்தியா
உட்பட, 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
அனைவரும் பயன்படுத்தும் வகையில், இந்த வசதி பின்னர் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...