தமிழகம் முழுவதும் இருந்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற, சென்னை,
ரிசர்வ் வங்கி முன் குவியும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
செல்லாத ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு, 2016, நவ., 9ல் இருந்து, வங்கிகளில் மாற்றி கொள்ள, மத்திய அரசு அனுமதித்தது.
ஏமாற்றம்
அப்போது, 'டிச., 30க்கு பின், வங்கிகளில் மாற்ற முடியாது; ரிசர்வ் வங்கியில், மார்ச், 31 வரை மாற்றி கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், டிச., 31க்குப் பின், சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.'நவ., 8 முதல், டிச., வரை, வெளிநாடு சென்றிருந்தோர் மட்டுமே, மார்ச், 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்; மற்றவர்களுக்கு அந்த சலுகை கிடையாது' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், புது விளக்கம் அளித்தனர்.
நெரிசலில் சிக்காமல், பின் மாற்றலாம் என காத்திருந்தோர், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விபரம் தெரியாமல், தமிழகம் முழுவதும் இருந்து, தினமும், நுாற்றுக்கணக்கானோர்,
ரிசர்வ் வங்கிக்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.வெளிநாடு சென்று திரும்பியோரும், இது போன்று பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
சுங்க அதிகாரிகள்
இது குறித்து, சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது:நான் பல மாதங்கள், வெளிநாட்டில் தங்கியிருந்து, சில தினங்களுக்கு முன், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக, சென்னை திரும்பினேன். அங்கு, சுங்கம் மற்றும் குடியுரிமை அதிகாரிகள், என்னிடம் இருந்த, 19 ஆயிரம் ரூபாய், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை பார்த்து அனுப்பி விட்டனர்.
சென்னையில் உள்ள, ரிசர்வ் வங்கியில் கேட்டால், 'இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் போது, சுங்க அதிகாரிகளிடம் எழுதி வாங்கி வந்தி ருக்க வேண்டும். அவ்வாறு எழுதி வாங்கி வராத தால், பணத்தை மாற்ற முடியாது' என, வாசலி லேயே திருப்பி அனுப்பி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
யார் பெற முடியும்?
ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டுகளை, நவ., 9 முதல், டிச., 30 வரையிலான காலகட்டத்தில், வெளிநாட்டில் இருந்த, இந்தியகுடிமக்கள் மற்றும் பணி, படிப்பு நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், மார்ச், 31 வரை மாற்றி கொள்ளலாம். ஆனால், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், வேறு நாட்டு குடிமக்களாக இருக்கும் இந்திய வம்சாவளி யினர், பணத்தை மாற்ற முடியாது.பாஸ்போர்ட்டில், இந்தியர் என குறிப்பிடப்படாதோர், பணத்தை மாற்ற முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ன ஆவணங்கள் தேவை?
* வெளிநாடுகளுக்கு சென்று, டிச., 30க்குப் பின் திரும்பியோர், பாஸ்போர்ட்டை எடுத்து வர வேண்டும்
* பாஸ்போர்ட்டில் முதல், கடைசி பக்கங்கள்; குடியுரிமை அதிகாரிகள் முத்திரையிட்ட, வெளிநாடு சென்ற தேதி; திரும்பிய தேதிகள் உள்ள பக்கங்களை காண்பிக்க வேண்டும்
* வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது, கையில் உள்ள, இந்திய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கணக்கிட்டு, சுங்கத்துறை அளித்த அத்தாட்சி கடிதத்துடன் வர வேண்டும்
* பான் கார்டு, சேமிப்பு கணக்குள்ள வங்கி விபரம், நவ., 8 முதல், டிச., 30 வரையிலான பண பரிவர்த்தனை அறிக்கை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்
* அனைத்தையும் அசல் ஆவணங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டு

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...