அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்களை
திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி 2016 ஆக., 1 ல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில் உபரி ஆசிரியர்களாக கணக்கிடப்பட்டோர் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்கள் அப்படியே இருந்தன.
தற்போது அந்த பணியிடங்களை காலியிடங்களாக காட்டி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது; அப்பணியிடங்களை பள்ளிக் கல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும். அதனை பள்ளி அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரிஜிஸ்டர்) பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...