கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக அரசியல் நிகழ்வுகள் பற்றிய
கருத்துகளை நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு
வருகிறார். இவரது ட்வீட்டுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள்
வருகின்றன.
இதுபற்றி சோஷியல் மீடியாவை நெருப்பாய் பற்றவைத்த கமல்ஹாசன்! பொறுமையிழந்த கமல் ட்விட்டரில் கெட்டவார்த்தை! ஸ்டாலினுக்கு போட்டியாக களமிறங்கிய கமல்! ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
தற்போது, தமிழக எம்.எல்.ஏ.,க்கள் பற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home ஊர் திரும்பும் எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிய மரியாதையுடன் தமிழக மக்கள் வரவேற்பளிக்க வேண்டும் என கிண்டலாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தக் கருத்தை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசன் மீது இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக மக்களைத் தூண்டும்விதத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது, மக்களை வன்முறைக்கு அழைத்துச் செல்லும். விரும்பிய அரசு அமையவில்லை என்பதால் வன்முறைக்கு மக்களைத் தூண்டுவது சட்டப்படி குற்றம். கமல்ஹாசனின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பயன்படுத்தி தொகுதி மக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு கமல்ஹாசனே பொறுப்பேற்க வேண்டும். வன்முறையைத் தூண்டும்வகையில் பேசியிருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...