நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை
திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில்,
மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும்
என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘முதற்கட்டமாக மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும். பாஸ்போர்ட் சேவையை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ரூர்கேலா, சம்பல்பூர், ஜெய்சால்மர், பிகானீர், அவுரங்காபாத், உதய்பூர், கோட்டா, ராஜஸ்தானின் ஜலாவர், ஜுன்ஜுனு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தபால் நிலையங்களில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, உதய்பூர் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் முதல் வாரத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும்.
மேலும் பாஸ்போர்ட் சேவை எந்தெந்த தபால் நிலையங்களில் கிடைக்கும் என்பதை வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். அப்போது அவர், ‘ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...