இந்தியன்
வங்கியின் செயலி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு
மின்உற்பத்தி மற்று பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் வங்கியின் "IB Customer'' என்ற செல்லிடப்பேசி செயலியின் மூலம் மின்கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் மின்கட்டணத்தை இந்த செயலியின் மூலம் செலுத்தலாம். தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் எளிதில் மின்கட்டணம் செலுத்தவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. "கூகுள் பிளே ஸ்டோரில்' இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
லெட்சுமி விலாஸ், தமிழ்நாடு மெர்கன்டைல், கரூர் வைஸ்யா, சிட்டி யூனியன் ஆகிய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, மொபைல் பேங்கிங் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...