காலை உணவை தவிர்த்தால் உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணை
புரியக்கூடிய, 'மெட்டபாலிஸம்' எனப்படும்,
வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு
ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும் போது உணவிலிருந்து உடலுக்குத்
தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக் கூடிய
இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும். தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய
சர்க்கரையை சக்தியாக பயன்படுத்தக் கூடிய திறன், இன்சுலினுக்கு இல்லாமல்
போகும். காலை எழுந்து, அவசரமாக வேலைக்கு செல்லும் போது காலை உணவைத்
தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகிறோம். இரவு உணவுக்கும், காலை
உணவுக்கும் இடையே உள்ள இடைவெளி தான், அதிகம். ஒரு நாளில், உடலில் உணவு
உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். எனவே, காலை உணவை தவிர்க்காதீர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...