ஐ.ஏ.எஸ். அனுபமா 2010 யுபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் நான்காவது இடம்
பிடித்து, அரசு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
இவர், கேரளாவில் கலப்பட உணவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து
வருகிறார். 2010 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவில் பணியாற்றி வந்த அனுபமா, கேரளாவில் உணவு பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.
கடந்த 15 மாதங்களில் மட்டும் மார்க்கெட், செக்போஸ்ட்களில் நடந்த சோதனைகளில் கிக்கிய 6 ஆயிரம் உணவு மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். இதில், 750 வியாபாரிகள் மீது வழக்குகள் பதியப்பட்டன. மேலும் கேரளாவில் உள்ள பல மார்க்கெட்டுகளில் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘ உணவு மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பினேன். ஆய்வு முடிவுகள் வெளியானபோது அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சில காய்கறி மற்றும் பழங்களில் அதிகளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருந்தன' எனத் தெரிவித்துள்ளார். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளைத் தவிர்த்து, ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் பின்புறம், மாடி போன்ற பகுதிகளில் காய்கறிகளை பயிரிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
கேரளா மக்களும் அவருடைய அறிவுரையின்படி, சொந்தமாக காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். முன்பு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு 70 சதவிகித காய்கறிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் தற்போது கேரளாவில் 70 சதவிகித காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இவரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுவே, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...