முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்
அனைத்து விவரங்களையும் அளிக்கத் தயார் என்று, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்
தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி நுரையீரல்
தொற்றுநோய் காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 7௦
நாட்களுக்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை
பலனின்றி, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார்.
அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் அதுகுறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள்
வலுத்தன. மேலும் அதிமுக-வைச் சேர்ந்த சசிகலா புஷ்பா எம்.பி.யும், ஜெயலலிதா
மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டுமென்று மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் விளக்கமளிக்கத் தயார் என அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதாப் ரெட்டி கூறியதாவது: மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்கள் குறித்து, எந்த விசாரணை நடத்தினாலும் மருத்துவ அறிக்கை அளிக்கத் தயார். ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுவிட்டது. முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி. ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்று அப்போது அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...