மணிப்பூரிலுள்ள மொய்ராங் அருகே லோக்தக் ஏரி உள்ளது.. இந்தியாவின்
மிகப்பெரிய நன்னீர் எரி என்று கூறப்படுகிறது. பல வகையான தாவர வகைகளும்,
மணலும், சிதைந்த உயிர்மங்களும் எரிக்கு நடுநடுவே இருப்பதால் அவற்றுக்கு
மேலே ஏரி மிதப்பதாக கூறப்படும். தாவர வளங்களால் உருவான ப்ஹும்டியில் சுமார்
4,000 மீனவர்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தப்பகுதியில் மிதக்கும் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. இம்பாலில் இருந்து 50கிமீ தொலைவில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.
இது பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 25 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட உள்ளூர் சமூகங்களின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தொண்டர்களுக்கு மக்கள் வள மேம்பாட்டு சங்கம அங்கீகாரம் அளித்துள்ளது.. இதை செயல்முறைப்படுத்த ஆக்ஷன் எயிட் இந்தியா .என்ற தொண்டு நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது. எனவே இது இந்தியாவின் மிதக்கும் பள்ளி என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக மூதாட்டிகளுக்கான பள்ளி மகாராஷ்டிராவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...