தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும்
ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்.
தற்போது பல்வேறு வகையான அதிநவீன கணனிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
எனினும் அவற்றை வைரஸ் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதில்
Antivirus -ன் பங்கு முக்கியமானதாகும்.
வைரஸ் என்றால் என்ன..?
கணனி வைரஸ்கள் என்பன நமது கணனியில் பயன்படுத்தும் Mocrosoft Word, Excel, Google Chrome போன்ற மென்பொருட்களை போல ஒரு மென்பொருள்தான்.
ஆனால், சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணனியின் செயல்பாட்டை முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய ஒரு வகை ப்ரோக்ராம்(Program) ஆகும்.
இந்த வைரஸ்களால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணனிகளுக்கு பரவிச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் தோன்றிய வைரஸாக அறியப்பட்டது கடந்த 1971 ஆண்டின் தொடக்கத்தில் தோன்றிய கிரீப்பர் வைரஸே ஆகும்.
அதேபோல் அதனை சரி செய்வதற்காக ரே தாம்லின்சன் என்பவர் உருவாக்கிய தி ரீப்பர் (The Reaper) என்ற ப்ரோகிராமே முதல் Antivirus - ஆக அறியப்படுகிறது.
*Antivirus என்றால் என்ன..?*
பொதுவாக கணணி வைரஸ்கள் மல்வேர் (Malware) ட்ரோஜன் ஹோர்ஸ்(Trojan Horse) ரூட்கிட் (RootKit) வோர்ம் (Worm) என்ற பல வகைகள் உண்டு.
அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றை கணணியில் இருந்து அழிப்பதே Antivirus - ன் வேலை.
அதாவது உங்கள் கணனியில் நீங்கள் புதிதாக ஒரு Antivirus மென்பொருளை நிறுவிய பின்னர் கணனியில் உள்ள அனைத்து ப்ரோகிராம்களையும் இந்த மென்பொருள் சோதனை செய்யும்.
அப்போது ஏதாவது ஒரு ப்ரோகிராமில் வைரஸ் இருந்தால் உடனடியாக நமக்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் அவற்றை கணணியில் இருந்து முற்றிலுமாக அழிக்கின்றன.
எனினும் இதையும் மீறி வைரஸ்கள் கணணியில் தங்கி விடுகின்றன. பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போதுதான் அதிகமான வைரஸ்கள் நமது கணணியை தாக்குகின்றன.
நாம் தரவிறக்கம் செய்யும் ப்ரோக்ராம்கள், பாடல்கள், கோப்புகள் என்பனவும் வைரஸ்களை கொண்டுவரலாம்.
பெரும்பாலும் காசுகொடுத்து வாங்க வேண்டிய ப்ரோக்ராம்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் என்று நினைத்துதான் பெரும்பாலானோர் வைரஸ்களுக்கு வழி திறந்து விடுகின்றனர்.
தற்போது எத்தனையோ Antivirus இன்று சந்தையில் உள்ளன. எனினும் என்னதான் ஆண்டிவைரசை நிறுவினாலும் இணையத்தை கவனமுடன் பயன்படுத்தினால் மட்டுமே வைரஸ்களை கட்டுப்படுத்த முடியும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...