சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில்,
'ஆதார் உதவி அலுவலர்கள்' நியமிக்கப்படுவர் என, தமிழ்நாடு அரசு கேபிள்,
'டிவி' மேலாண்மை இயக்குனர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்துள்ளது. பிப்., 13ம் தேதி முதல், இந்த மையங்களின் செயல்பாட்டு வழிமுறைகள், மாற்றி அமைக்கப்படும்.
அவற்றின் விபரம்:
தலைமை செயலகம், எழிலகம், சென்னை மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், ஆகியவற்றில், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படும்.
இவை, காலை, 9:45 மணி முதல், மாலை, 5:45 மணி வரை இயங்கும். இவற்றில், ஆதார் உதவி மேஜைகள் அமைக்கப்பட்டு, உதவி அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
அவர்கள், ஆதார் சேர்க்கைக்கு தேவையான படிவங்களை, பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்குவர். முதலில் வருபவருக்கு, முதல் சேவை என்ற அடிப்படையில், வரிசை எண் பொறிக்கப்பட்ட டோக்கன்களை வழங்குவர்.
அதன்படி நின்று, சேவைகளைப் பெற வேண்டும். ஆதார் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு, அவர்கள, விளக்கம் அளித்து உதவுவர்.ஆதார் பதிவிற்கு, கட்டணம் எதுவும் கிடையாது. நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் தொடர்பான புகார் எதுவும் இருந்தால், உதவி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.
உதவி அலுவலர்களின் பணியில் குறை இருந்தால், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், 18004252911 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...