பாஸ்போர்ட் பெற மார்ச் மாதம் முதல் குறிப்பிட்ட தபால் நிலையங்களில்
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 89
பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட்டுகள் பெறுவதற்கான
நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பெற
விண்ணப்பிக்கும் நடைமுறை மார்ச் 31ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று
வெளியுறவுத்துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இது முதற்கட்டமாக தமிழ்நாடு, மேற்குவங்கம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் உள்ள சில தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்த மாநிலங்களில் பணியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சேலம், வேலூர் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...