நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய
வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட்
சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால்
மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.
இந்த புதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு
உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில்
இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.
இது செல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.
மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில
பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில
பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
விலை உயரும் பொருட்கள்:
சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.
எல்.இ.டி. விளக்குகள்
வறுத்த முந்திரி பருப்பு
அலுமினிய தாதுக்கள்
பாலிமர் எம்.எஸ். டேப்புகள்
வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்
செல்போன் சர்க்கியூட் போர்டுகள்
விலை குறையும் பொருட்கள்
ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்
வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.
திரவ எரிவாயு
சூரிய மின் சக்தி தகடுகள்
காற்றாலை ஜெனரேட்டர்
பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்
பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...