கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்
தயாரித்து, வெளியிடும் புத்தகங்கள் மத்திய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ)
இணைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற 2017-2018ஆம் கல்வியாண்டில்
கட்டாயமாக்கப்படவுள்ளது.
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை
சம்பந்தப்பட்ட பள்ளிகள், வாரியத்தின் வலைதளத்தில் அதற்குரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி வாரியம் ஒரு சுற்றறிக்கையை
வெளியிட்டது. அதில், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்
ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சடித்து
விநியோகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ்
ஜவடேகர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், பாடத்திட்டம் ஒரே சீரானதாக
இருக்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அதாவது, டெல்லியில் உள்ள ஒரு
பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தில் உயிருள்ள மற்றும்
உயிரற்ற பொருட்களை வேறுபடுத்திக்காட்ட ஒரு பூனையை வைத்து சோதனை
செய்யும்வகையில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் தனியார்
வெளியீட்டாளர்களால் உருவாக்கப்பட்டது.
பாடப் புத்தகங்கள் அரசால் விநியோகிக்கப்படுவது
பெற்றோர்களுக்கு ஒரு விடுதலையைக் கொடுத்துள்ளது. ஏனெனில், தனியார்
வெளியீட்டாளர்கள் பாடப் புத்தகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்
என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் பல பள்ளிகள் தங்கள்
வளாகத்துக்குள்ளே ஸ்டோர்ஸ்களை வைத்துள்ளனர். பாடப் புத்தகங்கள்
விநியோகிக்கும் தனியார் வெளியீட்டாளர்கள், அதனுடன் பென்சில், ரப்பர்
மற்றும் பிற எழுதுபொருள்கள் அடங்கிய ஒரு பாக்சை விற்பனை செய்கின்றனர்.
இந்தப் பொருட்கள் வெளியே வாங்கும் விலையைவிட அதிகமாக இருக்கிறது என
பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பல பள்ளி
தலைமையாசிரியர்கள் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம்
மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தனியார் வெளியீட்டாளர்கள் செய்து
கொடுக்கின்றனர் என அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய மனிதவள அமைச்சகம், மார்ச் மாத இறுதிக்குள் புத்தகங்கள்
அனைத்தும் அச்சடிக்கப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என என்சிஆர்டி-க்கு
அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கல்வி வாரியம் 2017-2018ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ-ஐ) நீக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...