உளவு பார்க்க வீடியோ கேமராக்களை வைத்து ஆளில்லா விமானங்களை அனுப்புவது தீவிரவாதிகளின் வழக்கம்.
திரும்பி வரும் குட்டி விமானங்கள் மூலம் தான் எதிரி நாட்டின் பல்வேறு ரகசிய தகவல்களை தெரிந்து கொள்கிறார்கள்.
இவ்வித விமானங்களை தகர்க்க, பிரான்ஸ் நாட்டில் விமானங்களை வீழ்த்தும் பயிற்சியை கழுகுகளுக்கு அளித்து வருகிறார்கள். பெரிய கழுகுகள் குறுக்கிட்டால் விமானத்தையே புரட்டிவிடும் என்பதை அறிந்திருப்போம். இப்போது முறைப்படி பயிற்சியே கொடுத்தால் என்னாகும் ? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பிரான்ஸ் நாட்டின் MONT-DE-MARSAN விமானப்படை தளத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வீழ்த்தும் பயிற்சி கழுகுகளுக்கு அளிக்கப்படுகிறது.சிறிய ரக விமானத்தில் கழுகுகளுக்கு தெரியும் வகையில் இறைச்சி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் விமானம் பறக்க விடப்படுகின்றன. இறைச்சியை கண்டதும், விமானத்தை துரத்தும் கழுகுகள் அதை கீழே வீழ்த்துகின்றன.குஞ்சுகளாக இருக்கும் போதே கழுகுகளுக்கு, இப்பயிற்சியை விமானப்படை தள வீரர்கள் அளிக்கின்றனர். இதன் மூலம் தீவிரவாத செயல்களை முறியடிக்க முடியும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...