ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் குறைந்த மின்னழுத்த காரணத்தால்
ஏற்பட்ட தீ விபத்திலிருந்து, 10 பச்சிளம் குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள்
பாதுகாப்பாக மீட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம், விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நேற்று மாலை குறைந்த மின்னழுத்த காரணத்தால் 10 பச்சிளம் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த இங்குபேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்துக்குள் தீ மருத்துவமனையின் முதல் தளம் முழுவதும் பரவியது. இந்த விபத்தை முதலில் பார்த்த ஒரு செவிலியர் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 10 குழந்தைகள் மற்றும் தாய்மார்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனால், எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. பின்னர், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அரை மணி நேரத்துக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
செவிலியர்களால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நாங்கள் உயிர் தப்பியுள்ளோம் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கே.பத்மலீலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி கூறுகையில், ‘ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்த காரணத்தால்தான் தீ விபத்து ஏற்பட்டது. இதில், சில ஏர் கண்டிஷனரும், 10 இன்குபேட்டர்களும் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் இந்த மருத்துவமனையில் முதல்முறையாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், இதற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...