தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்குகிறது.
தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை
ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா
தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு, முதல் கட்டத்திலேயே, தமிழகம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம், இன்று துவங்கி, பிப்., 28 வரை, மூன்று கட்டமாக,
மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. முதல் இரண்டு வாரங்கள்,
பள்ளிகளிலும்; மூன்றாம் வாரம், அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள்
நடக்கின்றன.
பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில்
உள்ள தடுப்பூசி மையங்களில், மூன்றாம் கட்ட முகாம் நடக்கும். நான்காம்
வாரத்தில், விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். காலை, 8:00 மணி
முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கும்.
இந்த தடுப்பூசியை, ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகள்
முதல், 15 வயதிற்குப்பட்டோர் வரை போட்டு கொள்ளலாம் என, தமிழக சுகாதாரத்
துறை அறிவித்துள்ளது.
சுகாதார முறைகள்பின்பற்றப்படுமா?
பொதுவாக தடுப்பூசி போடும் போது குழந்தைகளின் ஆரோக்கியம்,
உடல்நிலை போன்றவை கணக்கில் கொள்ளப்படும். குழந்தைகளுக்கு எந்த விதமான
காய்ச்சல் உட்பட நோய் தாக்கம், தொற்று இல்லாவிட்டால் மட்டுமே தடுப்பூசி போட
முடியும். இதை, தடுப்பூசி போடும் குழுக்கள், நர்சுகள், 100 சதவீதம் உறுதி
செய்ய வேண்டும் என, சுகாதாரத் துறை அறிவுறுத்தி
உள்ளது.
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...