ஏஐசிடிஇ ஒப்புதல் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண்களின்
சேர்க்கை கடந்த 2014-15 கல்வியாண்டில் 42.21 சதவிகிதமும் 2015-16
கல்வியாண்டில் 46.60 சதவிகிதமும் இருக்கும்போது, ஐஐடி கல்வி நிறுவனத்தில்
பெண்களின் சேர்க்கை 2015-16 கல்வியாண்டில் 8% தான் இருக்கிறது என்று அரசுத்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியதாவது: ஐ.ஐ.டி.யில் பெண்கள் சேர்க்கையை மேம்படுத்த மூன்றுபேர் கொண்ட குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
இதுபோன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறியதாவது: அகில இந்திய ஆய்வுப்படி, உயர் கல்வியில் 2013-14ஆம் ஆண்டிலிருந்து 2015-16 ஆண்டுக்கான கல்வியாண்டில் 69.862 பேராசிரியர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பாண்டே ‘உயர் கல்விக்கான மாணவர்களின் பதிவானது (Registration), மொத்த உயர் கல்வி சேர்க்கையில் 18 – 23 வரையிலான வயதுடையவர்களை தவிர்த்துவிட்டு கணக்கிடப்படுகிறது. உயர் கல்விக்கான மொத்தச் சேர்க்கையில், 18 – 23 வயதுடையவர்களின் விழுக்காடானது, மொத்த சேர்க்கைவிகிதம் (GER) என்றழைக்கப்படுகிறது’ என்று கூறினார்.
AISHE அறிக்கையின்படி, 2015 – 16 காலகட்டத்தில் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கைவிகிதமானது 24.5 சதவிகிதமாக இருந்தது. மேலும் 2004 –05 காலகட்டத்தில் இது 10 சதவிகிதமாக இருந்தது என்று அமைச்சர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...