திருச்சியில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்களில் ஜெயலலிதாவின் படத்தை
திருவள்ளுவர் படத்தைக் கொண்டு மறைத்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கொடுத்த 4 ஆண்டு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து
தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படும் அரசு
மரியாதைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். பாட புத்தகங்களில் ஜெயலலிதா படம்,
குறிப்புகளை நீக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தி
வருகிறது. மேலும் அரசு வழங்கும் இலவச பொருட்களில் ஜெயலலிதா படங்கள்
அகற்றப்பட வேண்டும் எனவும் மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களையும் அவ்வமைப்பு நடத்தி
வருகிறது.
இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிலர், தமிழக அரசு வழங்கிய பள்ளி பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் பைகளில் அச்சிடப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்களை மறைத்து திருவள்ளுவர் படங்களை ஒட்டினர்.
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளதால், பள்ளிப் பாட புத்தகம், பைகளில் இருந்து மறைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அரசு அலுவலகங்களில் அவரது படத்தை வைக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஜெயலலிதாவின் படத்தை மறைத்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த போலீஸார், பாடபுத்தகங்களில் ஜெயலலிதாவின் படத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தையொட்டியவர்களை கைது செய்தனர்.

Suyathai ilantha police....thandanai petra jayalalitha padam irupathu sariya,illa valluvar padam irupathu sariya...manasatchi illaiya police ku
ReplyDelete