Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு !!

       இரண்டாம் உலகப் போரின் போது கிரேக்கத்தில் புதையுண்ட 250 கிலோ வெடிகுண்டை ஞாயிறு அன்று வலுவிலக்கச் செய்கின்றனர் கிரேக்க அதிகாரிகள்.

கிரேக்கத்தின் இரண்டாம் பெரிய நகரான தெசலோனிகியின் இருக்கும் இந்த வெடிகுண்டை வலுவிக்க செய்யும் காரணத்தினால் எழுபதாயிரம் மக்கள் நகரை விட்டு
வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 1940 களில் இரண்டாம் உலகப் போரின் போது நடந்த விமானத் தாக்குதல் வேளையில் இடப்பட்ட இந்த வெடிகுண்டு,கடந்த வாரம் எரிசக்தி தொட்டிகளை விரிவு செய்யும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. 5.5 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டை ஞாயிறன்று நிபுணர்கள் வலுவிலக்கச் செய்யவிருக்கிறார்கள். இதன் முதல் கட்டமாக முன்னூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், படுக்கையில் இருக்கும் நோயாளிகளும் நகரை விட்டு வெளியேற்றப் பட்டனர். ஞாயிறு காலை எட்டு மணிக்கு அத்தனை பேரும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அருகில் இருக்கும் அகதி முகாமில் தங்கியிருப்பவர்களையும் வெளியேற்றவிருப்பதாக இடப்பெயர்வு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
“செப்டம்பர் 17, 1944 ஆம் ஆண்டு ஆங்கில விமானங்களும், அமெரிக்க விமானங்களும் தான் இந்த வெடிகுண்டை இங்கே போட்டது” என்கிறார் 86 வயதான கியோர்காஸ் கெராசிமௌ. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 800 அடிகள் தொலைவில் இவருடைய வீடு இருக்கிறது.இச்சம்பவம் நடந்த போது அவருக்கு வயது 13.ஜெர்மன் ரயிலகளை குறி வைத்துப் போடப்பட்ட குண்டுகள் இவை என்கிறார் அவர். 1941 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1944 வரை நாசி ஜெர்மனி கிரேக்கத்தை கைபற்றி வைத்திருந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive