Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிற்றலை தடுக்கவழங்கிய ஊக்கத்தொகை கிடைக்குமா?

      மாணவர்களின் இடை நிற்றலை தவிர்த்து, கல்வி தரத்தை உயர்த்த சிறப்பு ஊக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது.
 
        முழுமையாக பள்ளி கல்வி படிப்பை முடித்த பெரும்பாலான மாணவர்களுக்கு இன்னும் ஊக்கத் தொகைவங்கி கணக்கில் வரவு ஆகாததால் மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.
ஊக்கத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாணவர்களின் கல்வி தரம் உயர, பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக, மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்து, 2011--12ம் கல்வி ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த மாணவர்கள் 10ம் வகுப்பு சேர்ந்ததும், தேசிய வங்கிகளில் மாணவர்களுக்கு கணக்கு துவக்க பள்ளி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டது. 10ம் வகுப்பிற்கு ஆயிரத்து 500, தொடர்ந்து, 11ஆம் வகுப்பிற்கு ஆயிரத்து 500, பிளஸ் ௨விற்கு 2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் தலா ஒரு மாணவர் விகிதம் முதலீடு செய்கிறது. ஊக்கத்தொகை தொடர்ந்து படித்து முடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன், வட்டி வழங்கப்பட்டு,பிளஸ்௨ வகுப்பு வரை பெயிலாகாமல் முடித்து செல்லும் மாணவர்களுக்கு, 2, 3 மாதங்களில் அதிக பட்சம் 6 ஆயிரம் வரை வங்கி கணக்கில், வரவு வைக்கப்படும். தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. தொடர முடியாத படிப்பு இந்த தொகை ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ௨௦11--12ஆம் கல்வி ஆண்டில் முடித்த விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஊக்கத் தொகைஇதுவரை கிடைக்கவில்லை. உயர் கல்வி படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் மாணவர்கள் ஏராளம்.

இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அந்த தொகை கிடைத்தால்உயர் கல்வி படிப்பை தொடர ஏதுவாக இருக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கும், வங்கிக்கும் நடையாய் நடக்கின்றனர். ௨௦11--12 கல்வி ஆண்டில் முடித்த பெரும்பாலான மாணவர்களுக்கே இன்னும் கிடைக்கவில்லை என்றால், சமீபத்தில் முடித்த மாணவர்களுக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

கார்ப்பரேசன் மூலம் வழங்கப்படும் இந்த தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா இல்லையா என்ற விபரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குகூட தெரியாது.ஒரு வேளை வங்கி கணக்கு எண் மாறியிருந்தாலும் வரவாகாது. அதே சமயத்தில், வங்கியில் 6 மாதம் வரை வரவு செலவு கணக்கு வைக்காவிட்டால் தானாக கணக்கு லாக் செய்யவாய்ப்பிருக்கிறது. தாமதம் தவிர்க்கஅந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் காசோலையாகவோ அல்லது பணமாகவோ வழங்கியிருக்கலாம்.

 விலை உயர்ந்த லேப் டாப்பையே பள்ளிதலைமை ஆசிரியர்கள் வழங்கும் போது, இந்த ஊக்கத் தொகையையும் அவர்கள் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம். இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்களின் நலன் கருதி, கிடைக்க வேண்டிய ஊக்கத் தொகையை உரிய நேரத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏமாற்றத்தில் மாணவர்கள் ராஜராஜன், காரியாபட்டி: ௨௦11--12 ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் போதுதான் இந்த அறிவிப்பு வெளியானது. தேசிய வங்கியில் கணக்கு துவக்கப்பட்டு, தொடர்ந்து பெயிலாகாமல் படித்து முடித்த எங்களுக்கு, இன்னும் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை. வங்கிக்கும், பள்ளிக்கும் நடையாய் நடந்து ஆசிரியர்களிடமும், வங்கி அலுவலர்களிடமும் கேட்டால் தெரியாது என்கின்றனர். எங்களைப் போன்ற எத்தனையோ ஏழை எளிய மாணவர்கள் கல்லுாரி படிப்பை தொடர முடியாமல் சிரமப்படுகிறோம்.

அரசு நல்ல ஒரு திட்டத்தை செயல்படுத்தியும், உரிய நேரத்தில் ஊக்கத்தொகை கிடைக்காதது, பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்திருந்தால், இந்நேரம் எல்லோருக்கும் பயன்பட்டிருக்கும். வங்கி, பள்ளியை தவிர வேறு யாரிடத்தில் கேட்பது என்பது தெரியாமல், சிரமப்படுகிறோம். ஒரு வேளை வங்கி கணக்கில் தவறுகள் இருந்தால் அவற்றை திருத்த வாய்ப்பளித்து, ஊக்கத் தொகைகிடைக்க, சம்மந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive