நுரையீரலை பாதிக்கும் சுவாச நோய்களில் ஒன்றான சிஸ்டிக் பைப்ரோசிஸ்
நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளால் காது
கேட்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டாம்.
15லிருந்து 63வயதுக்குட்பட்ட
சிஸ்டிக்ஃபைப்ரோஸிஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 81 நோயாளிகளிடையே
மேலும் இந்த
மருந்துகளால் நிரந்தர காதுகேளாக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் பாதிப்புகளுக்கு உட்பட்ட சுமார் 70,000 நோயாளிகள் அமினோ கிளைக்கோஸைட் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்தி வருகிறார்களாம். அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சுவாசக் குழாய்களில் நோய்த்தொற்றுக்காக சக்திவாய்ந்த ஆன்ட்டிபயாட்டிக்ஸ் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பிற நோயாளிகளைவிட 4.79 சதவிகிதம் நிரந்தர காதுகேளாமை பாதிப்புக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மாதிரியான நோயாளிகளை தனிமைப்படுத்தினாலோ அல்லது மனஉளைச்சலுக்கு உட்படுத்தினாலோ மனநல பாதிப்புக்கும் உள்ளாகிறார்களாம்.
மேலும் அமினோ கிளைக்கோஸைட் மருந்துகள் மனித உடலின் புரதத் தொகுப்பு மண்டலத்தையும் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மனித வாழ்வை அச்சுறுத்தும் பல நோய்த்தொற்று பிரச்னைகளைத் தீர்க்க இந்த புரதத்தொகுப்பு மண்டலங்கள் மிகவும் அவசியமானவை. மேலும் இந்த மருந்துகள் காதுகளில் உள்ள உட்செவி அமைப்பையும் பாதிப்பதோடு, சிறுநீரகக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறதாம்.
நுரையீரலில் தீவிரமான நோய்த்தொற்றுக்கு ஆளான நோயாளிகளிடையே காது கேளாமை பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகக் கடினமான விஷயம். ஏனெனில், அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய்த்தொற்றினால் பல்வேறு உடல் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும். எனவே, ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தேவைக்கு ஏற்ப அளவாக எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...