உத்தரப்பிரதேசத்தில் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று கூறி, மாணவிகளை
ஸ்கர்ட் இன்றி ஓடவைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் மாணவிகளுக்காக உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 8ஆம்
வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிகளுக்கு தண்டனை கொடுக்கும்விதமாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா சிங் என்பவர் மாணவிகளின் ஸ்கர்ட்டை அவிழ்க்கவைத்து பள்ளி மைதானத்தில் ஓடச் சொல்லியிருக்கிறார்.
இதனால் வேதனையடைந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் நியாயம் கேட்டுள்ளனர். பின், இந்த விவகாரம் உடனடியாக மண்டல கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து, மாணவிகளுக்கு மிகவும் சங்கடமான தண்டனையைக் கொடுத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மண்டல கல்வி அதிகாரி திலிப் குமார் கூறியதாவது: மாணவிகளுக்கு இதுபோன்ற கொடூர தண்டனை கொடுத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் மாணவிகளுக்கு இதுபோன்று நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பள்ளிகளில் மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அடிக்கக் கூடாது என்று அரசு கூறியிருப்பது நினைவுகொள்ளத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...