Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவராக எஸ்.ராஜேஷ்வரன் நியமனம்! !!

       ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றக்கோரி ஜனவரி17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்று முடிந்த இப்போராட்டம் இறுதி நாளன்று கலவரமான சூழ்நிலைக்கு
உள்ளாக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தடியடியால் மக்கள் அங்கும் இங்கும் ஓடினர். போராட்டக்காரர்களில் சிலரும் வன்முறையில் இறங்கினர்.

வன்முறையில் கார்கள் மீது தீ வைப்பது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவது, பொதுமக்கள் மீது கல் வீசுவது, மீனவக் குப்பத்துக்குள் புகுந்து அவர்களை அடிப்பது, பெண் போலீஸ் ஒருவர் குடிசைக்கு தீ வைப்பது, பெண்களையும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வது, லத்தி சார்ஜ் செய்தது, பத்திரிகையாளர்களையும் விட்டுவைக்காமல் அடித்தது போன்ற வீடியோ காட்சிகளும் புகைப்படங் களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

அதன் பின்னர் போராட்டம் நடத்திய பல மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆணையத்தை பணியில் இருக்கும் நீதி அரசர் தலைமையில் அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.

எனவே ஜல்லிக்கட்டு போராட்டங்களின் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கலவரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பணிகள்

கலவரத்துக்கான காரணம், காவல்துறையினர் தடியடி, கலவரத்தில் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதா, காவல்துறையினர் அத்துமீறி நடந்துக் கொண்டார்களா, என்பது குறித்து இந்த ஆணையம் விசாரணை நடத்தும். அவ்வாறு காவல் துறை அத்துமீறி நடந்து இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பின் வரும் காலங்களில் இதுபோன்ற கலவரம் ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றியும் .

கலவரம் குறித்து வெளி வந்த பல வீடியோக்கள் குறித்து உண்மைத்தன்மையை வெளிகொண்டுவர சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளதாகாவும் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இந்த விசாரணை அறிக்கையை மூன்று மாதத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எஸ்ராஜேஷ்வரன் குறிப்பு:

இவர் 1.11.1952 அன்று தஞ்சாவூரில் பிறந்தார். பொருளியல் மற்றும் சட்டத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 10/12 /2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின் 20/4/2007-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக மாற்றப்பட்டார். கடந்த 30/10/2014 -ல் ஓய்வு பெற்று

தற்போது சமரச வழக்குகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive