சென்னை: ''ரஷ்யாவில் மருத்துவம் படித்த இந்தியர்கள், சர்வதேச
மருத்துவர்களாக மிளிர்கின்றனர்,'' என, சென்னை, ரஷ்ய கூட்டமைப்பின் துணை
துாதர், சர்ஜி எல்.கதோவ் தெரிவித்தார்.
இந்திய அயலக மருத்துவ பட்டதாரிகள் கழகம், சர்வதேச மருத்துவ கல்வி மற்றும்
ஆராய்ச்சி மையம், ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை இணைந்து, 'ரஷ்யா
மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய மருத்துவ பட்டதாரிகள் மன்றம் - 2017' என்ற
நிகழ்ச்சியை, சென்னையில் நேற்று நடத்தின.
இதில், சென்னை ரஷ்ய கூட்டமைப்பின் துணை துாதர், சர்ஜி எல்.கதோவ்
பேசுகையில், ''இந்தியா - ரஷ்யா இடையே நல்ல நட்புறவு உள்ளது. இந்தியாவின்
சர்வதேச மருத்துவர்களில், 80 சதவீதம் பேர், ரஷ்யாவில் படித்தவர்கள் என்பதே
இதற்கு சான்று,'' என்றார்.
'அமெட்' பல்கலை வேந்தர், ராமச்சந்திரன் பேசுகையில், ''பணத்தை வைத்து
கொண்டு, கவுரவத்திற்காக மருத்துவம் படிப்பவர்களை, 'நீட்' தேர்வால் தடுக்க
முடியும். அதே நேரம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்காத கிராமப்புற
மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவு நிறைவேறாது,'' என்றார்.
ரஷ்ய அறிவியல் கலாச்சார மையத்தின் இயக்குனர், மிக்கேல் ஜே.கார்ப்பதோவ்
பேசுகையில், ''இந்திய - ரஷ்ய புரிந்துணர்வின் மூலம், நிறைய மருத்துவ
மாணவர்கள் பயன் அடைகின்றனர். ரஷ்ய அரசும், மாணவர்களுக்கு உதவித்தொகை
வழங்குகிறது,'' என்றார்.
அன்வர் ராஜா எம்.பி., பேசுகையில், ''இந்தியாவில், அதிக மதிப்பெண் எடுக்கும்
மாணவர்கள் மருத்துவர்களாகின்றனர்; அதை, கவுரவமாக நினைக்கின்றனர்.
மாணவர்கள் விரும்பும் படிப்பை தேர்ந்தெடுக்கும் நிலை வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை பேராசிரியர் ஆசாத், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...