பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எனப் பல ஆவணங்களை வழங்கி வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், நம் நாட்டில் முதன்முறையாகக் கண் கருவிழி ஸ்கேனிங் மற்றும் ஆதார் எண்ணை மட்டுமே வழங்கி, வங்கிக் கணக்கைத் திறக்கும் வசதியை டிசிபி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
டிசிபி இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் கண் கருவிழி ஸ்கேனிங் மூலம் வங்கிக் கணக்குத் திறக்கும் முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாகக் கடந்த ஆண்டு, ஆதார் அடிப்படையிலான ஏடிஎம்களை இந்த டிசிபி வங்கிஅறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கருவிழி அடிப்படையிலான வங்கிக் கணக்குத் திறக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
முதலில், 10 கிளைகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இது தொடங்கப்பட்டது. கருவிழி ஸ்கேனிங் மூலமாக இதுவரை நூற்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் திறக்கப்படும் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பல வாடிக்கையாளர்கள், ஆவணங்களைக் கையாள் வதை பிரச்னையாகக் கருதி வந்தனர். இப்போது இதன் மூலம் அது எளிதாக்கப்பட்டு உள்ளது.

good...that is easy method
ReplyDeletegood...that is easy method
ReplyDelete