’பேஸ்புக்’ நண்பர்கள் பட்டியலில், மாணவர்களை சேர்க்க, பேராசிரியர்களுக்கு, கேரள கல்லுாரி தடை விதித்துள்ளது.
கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி
நடக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்தில், ’தாசன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’
என்ற கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரி, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.கல்லுாரியில்,
மார்க்சிஸ்ட் மாணவர் பிரிவான, எஸ்.எப்.ஐ., என்கிற இந்திய மாணவர்
கூட்டமைப்பு உட்பட, அனைத்து மாணவர் சங்கங்களும் செயல்பட தடை
விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லுாரியில் பணியாற்றும்
பேராசிரியர்கள், தங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக, அந்த கல்லுாரியில்
படிக்கும், மாணவர்களை சேர்த்திருந்தனர். இதுபற்றி அறிந்த கல்லுாரி
நிர்வாகம், ’பேஸ்புக்கில், மாணவர்களை நண்பர்களாக சேர்க்க,
பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என, அறிவித்துள்ளது. கல்லுாரி
முதல்வர், டாக்டர் ராஜன் நம்பியார் கூறுகையில், ”மாணவர்களுடன்,
பேஸ்புக்கில் நண்பர்களாக பேராசிரியர்கள் இருப்பதை, நிர்வாகம்
விரும்பவில்லை. அதனால், தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை, பேராசிரியர்கள்
அனைவரும் ஏற்று, உடனடியாக தங்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து மாணவர்களை
நீக்க வேண்டும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...